vithiya vithiya  (2917 views)

 

What is vithiya doing now?

still busy catch u later friends.....
More than 1 month ago  ·  Comment »

Location

India

Birthday

December 25
 
Advertisement

Info

Birthday

December 25

Location

India

 

About Me

http://www.youtube.com/watch?v=koFEEMYgrr8

Interests

watching cartoons
listing songs

Favorite Music

A.R Rahman music
 

Favorite Movies

the day after tomorrow
dasaavtharam
krish...ect
 

Favorite TV Shows

i like cartoons
 

Favorite Books

not interest
 

Favorite Quote

love is god

TO HANDLE YOURSELF, USE YOUR HEAD;
TO HANDLE ATHERS, USE YOUR HEART
 

hi5 Games

Play hi5 Games

vithiya hasn't played any games recently.

Applications

Browse Applications

SuperFive!
Tired of the same old fives? Add SuperFive to do stuff to your friends: hug, slap, tickle and more!

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins

vithiya has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for vithiya

Nov 3 3:09 PM
 
விழி ஊறி நதியாகி விழுந்தோடும் எம்மில் அவர் விடுகின்ற உயிர் மூச்சு எழும் எங்கள் மண்ணில். நீங்கள் மீண்டும் நிச்சயம் வருவீர்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் எம் நெஞ்சிலே எரியும் உங்க‌ளின் நினைவெனும் நெருப்புட‌னும் உங்க‌ளின் வ‌ர‌வுக்காக‌க் காத்திருக்கின்றோம்.
jh
 
 
 
 
 
 
Aug 25 4:13 PM
 
கண்ணீரில் காவியங்கள் சென்னீரில் ஓவியங்கள் தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக்கோலங்கள் வீடியோவைப்பார்க்க கீழேயுள்ள படத்தில் அழுத்தவும்  @ Yahoo! Video இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம் பிரசுரித்த திகதி : 25 Aug 2009 பிரசுரித்த நேரம்: 19.00 GMT நேரடியாகப் பெறப்பட்ட காணொளி , இளகிய மனமுள்ளவர்கள் பார்க்கவேண்டாம். இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது. கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம். தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது. ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம். எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம். புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று. r
 
Aug 20 4:43 PM
ramm says:
 
HI" Vithiya" how are youuuuuuuuuuuuuuuuuuu? What are you doing?
 
 
 
 
 
May 25 5:24 AM
 
http://www.youtube.com/watch?v=koFEEMYgrr8
 
May 21 6:20 AM
 
மண்ணை மறவா எம் தலைவன் அவன் எங்கள் மண்ணில் வேரூன்றி நின்ற பனை அன்னை மண் பறிக்கும் மாற்றான் எதிரில் அவன் அனலைப்பொழிகின்ற ஏவுகணை click to commentclick to commentclick to commentn
 
May 19 9:45 AM
 
இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை
தமிழீழம்
19.05.2009
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.

அன்பு மிக்க எம் உறவுகளே!
60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது.

இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றதனையும் உலகம் அறிந்துள்ளது.

சொந்த காலில் சுயமாக கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்து எமது போராட்டத்தினை தாம் விரும்பியவாறு பயன்படுத்த அண்டை நாடுகளும் சர்வதேசமும் போட்டிபோட்டுக் கொண்டுசெய்த சூழ்ச்சிகளை எமது தலைவர் அவர்கள் கடந்த 30 வருடங்களாக உடைத்தும் தகர்த்தும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்துள்ளார்.

இன்றுவரை எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் போகாது சுயமாக நின்று போராடியதனால்தான் நாம் அனைவரும் தமிழீழ தேசம் என்ற ஒரே குடையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.

இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் எமது தாயகம் தன்னாட்சி சுய உரிமை என்று தன் அடிப்படையில் எமக்கான உரிமைகளை வழங்க முற்படுவதற்கு மாறாக தாம் விரும்பிய தீர்வுகளை தரமுற்பட்டது.

அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளை வழங்கி எமது சுயநிர்ணய உரிமையினை எப்படி முடக்கி அடக்கி எமது தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றலாம் என திட்டமிட்டு செயற்பட்டது.

தொடர்ந்தும் இவ்வாறான அரைகுறை தீர்வுகளை வழங்குவதன் ஊடாக எமது முனைப்பு பெற்ற ஆயுத போராட்டத்தினை மழுங்கடிக்க முயற்சி செய்தது.

காலத்திற்கு காலம் சிங்கள அரசு எமது நியாயமான போராட்டத்தினை மறுதலித்து அதற்கு மாறாக ஓர் இனப்படுகொலையினை எம் மக்கள் மீது ஏவி விட்டுக்கொண்டிருந்தது.

இந்த இனப்படுகொலையினை அரசாங்கம் குடியேற்றம் என்றும் அபிவிருத்தி என்றும் பயங்கரவாதம் என்றும் புதிய புதிய வார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவியுடன் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்துகொண்டிருந்தது.

இறுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இன அழிப்பு ஆயுதத்தினை எடுத்து சர்வதேச ரீதியான அங்கீகாரத்துடனும் அயல் நாடுகளின் வழிகாட்டுதலுடனும் ஓர் மிகப்பெரிய இன அழிப்பு போரினை அனைத்து சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும் மீறி செயற்படுத்திக் கொண்டிருந்தது சிங்கள தேசம். எமது தேசியத்தலைவர் அவர்கள் சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போரினை உலகுக்கு தெரியப்படுத்திக்கொண்டே தமிழீழ மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு போரை நடாத்திக்கொண்டிருந்தார்.

ஆனால் சர்வதேசம் இனப்படுகொலைக்கான எத்தனையோ சாட்சியம் இருந்தும் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குள் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் முழுங்கியவாறு கண்மூடித்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த இக்கட்டான நிலையில்தான் எமது தலைமை மக்களை காக்கும் இறுதி முயற்சியாக ஆயுதப்பாவனையை நிறுத்துவதாகவும் உடனடியாக மக்களை பாதுகாக்குமாறும் சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டது.

ஆனால் சர்வதேசத்தின் மௌனம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை துடைதத்தழித்து விட்டோம் என்ற இறுமாப்பில் சிங்கள தேசமும் அதன் கூட்டாளிகளும் ஆரவாரித்துக்கொண்டிருக்க தாயகமும் புலம்பெயர் தமிழர் தேசமும் துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.

20 ஆயிரத்திற்கும் அதிமான மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றின் இழப்புக்கள் தியாகங்கள் அனைத்தும் வீண் போகாது வீண்போகவும் விடமுடியாது.

கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வோம். மீண்டும் ஒருங்கிணைந்து எமது இலட்சியத்தினை அடைவதற்காய் போராடுவோம்.

கணிசமான போராளிகளையும் மக்களையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் இழந்தது. உலகெங்கும் வாழும் எம் உறவுகளிற்கு பெரும் துயராக இருக்கும். எனினும் துயரங்களை சுமந்து பயணங்களை தொடர்வோம்.

தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள் போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம். போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலக்கு மாறாது என்ற தலைவரின் சிந்தனையுடன்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
நன்றி
வணக்கம்
போராளி கே.பி.அறிவன்.
 
 
 
 
Apr 23 11:09 AM
 
பரமேஸ்வரா நீ தியாகத் தீ..!

உன்சாவை கண்டுதானா
உலகம் விழிக்க வேண்டும்..
நீயும் தமிழமகன்தான்.
தளராத ஒரு வீரன்தான்.
பரமேஸ்வரா பார்திருக்க
உலகம் நீ பசித்திருக்கின்றாய்.

நல்லூர் வீதி விட்டு நகர்ந்துள்ள
உன்யாகம் வெள்ளை வீதியில்
ஆனால் கொடுங்கோல் முடிவில்லை
அதை செய்தவரும் மாறவில்லை.

தில்லையாடி வள்ளியம்மா
பிறந்த மண் என்பார்.
காந்தீய யாத்திரையால் சுதந்திரம்
கொண்டோம் என்பார்..
இன்று கொல்லும் போது எம்மை
ஏன் மெளனமாய் உதவுகின்றார்.
புரியாத எமக்கு புரிய முன்னர்
இழவுதான் மிஞ்சும்..

அவர் மெளனம் கலைக்க நீ தொடுத்த
போராட்டம் பொய்க்காது.
ஒற்றை மரம் தான் கண்ணுக்கு தெரியும்
அதை தாங்கும் வேர்கள் என்றுமே தெரியாது.
உனக்கு பின் தமிழர் நாமுள்ளோம்
மீண்டும் ஒரு பார்த்தீபனாய் வந்துள்ளாய்.

பாரினில் பெரும் தீ மூட்டி நீ வெள்ளை
துரைகளின் அரசியல் உறைவிடத்தில்.
ஆனால் ஒவ்வொரு தமிழனின்
மனதில் தியாகத்தீ நீ.

நீ இருக்கும் நோன்புக்கு பதில் கிடைக்கும்
உண்துணிவுக்கு தமிழர் தலைவணங்கும்
சுதந்திர நாள்கிடைக்கும்.போராட்டங்கள் பொய்த்தில்லை

சாவோடு நீ விளையாடி சொல்லி
நிற்கும் துன்பங்களும்..
இலட்சியத்தை அடைய நீ கொண்ட கோலம்
கண்ணுக்குதெரியுமா?
இல்லை கயவர்கள் கண்ணுக்கு உண்ணா நோன்பும்
பயங்கர வாதம் தானா?

...........................


ரகசியா சுகி
 
Apr 22 3:53 AM
 
அன்புக்குரிய மக்களே

தற்போதைய எமது போராட்டத்தின் படிநிலைகளை நீங்கள் எல்லோரும் ஓரளவு அறிவீர்கள்,எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே தனி நாடு தமிழீழம் என்ற உன்னத குறிக்கோளுக்காக இக்குறிக்கோள் எந்த காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாற்றமடையாது.எமது போராட்டம் ஆரம்பிக்கும் போது இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வரும் இழப்புக்கள் வரும் என்பதை எல்லோரும் அறிந்திருந்தோம்,எமது குறிக்கோளுக்காக முப்பது வருடமாக ஆயுதம் ஏந்தி போராடி 24500 மாவீரர்களையும் 75000 மக்களையும் இதுவரையும் இழந்துள்ளோம் அதைவிட பல பொருளாதார வளங்களையும் இழந்துள்ளோம் இவை எல்லாம் ஏதற்காக ? எமது உன்னதமான குறிக்கோளுக்காக இந்த முப்பது வருடகாலமும் பயணித்துவிட்டோம் இனிமேல் இந்த குறிக்கோளில் இருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை,நாம் நம்பிய பல நாடுகளும் எம்மோடு கடைசிவரை இருந்த பல துரோகிகளும் எமக்கு முதுகில் குத்திவிட்டார்கள் அவர்களை நாம் சரியாக அடையாளம் கண்டுள்ளோம்,அவர்களுக்கு எமது வரலாற்றில் மன்னிப்பே கிடையாது அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது வழங்கப்படும் இதிலும் எவ்வித மாற்றமும் இல்லை,அன்புக்குரிய மக்களே எமது போராட்டத்தோடு 30 வருடகாலம் பலவித தியாகங்களோடு பயணித்துள்ளீர்கள் நீங்களே எமது பலம்,உங்களுக்காகவே எமது போராட்டம்,இனிவரும் காலங்களில் எமது போராடும் வழிமுறைகள் மாற்றமடையலாம் ஆனால் எமது குறிக்கோள் என்பது எப்போதும் மாற்றமடையாது என்பதை அறுதியாக தெரிவித்துகொள்கின்றோம்,எமது விடுதலை தாகம் தமிழீழத்திலே மட்டும் தான் முற்றுப்பெறவேண்டும், ஆகவே மக்களே சோர்ந்துவிடாதீர்கள் கவலைப்படாதீர்கள் உள்ளத்தில் நெருப்போடு, உணர்வோடு நீங்கள் வாழும் நாட்டிலே எமது போராட்டத்துக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக போராடுங்கள்,நீங்கள் தற்போது உங்கள் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல சிக்கல்களையும் தாண்டி தமிழீழ மக்கள் என்ற உணர்வோடு ஓன்று[பட்டு போராடிவருகிறீர்கள் இதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ,நீங்கள் போராடியதற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது ஆனால் முழுமையடையவில்லை தற்போதும் உலக நாடுகள் சில ஒருவித மயக்கநிலையிலேயே இருக்கின்றன ஆகவே நீங்கள் எழுந்திருங்கள் துணிந்திருங்கள் விழித்திருங்கள் காத்திருங்கள் அவர்கள் மயக்கத்தை போக்கியிருங்கள்,சிங்களம் தற்போது பெற்றிருக்கும் அடைவு வெற்றியா தோல்வியா என்பதை அவர்களின் வாயால் சொல்வதை நீங்கள் இன்னும் சில நாட்களில் அறிவீர்கள்,நாம் நிலத்தை இழந்திருக்கிறோம் என்பது உண்மையே ஆனால் எம்மிடையே இருக்கும் தமிழீழம் என்ற உணர்வு மரணிக்கவில்லை மரணிக்கப்போவதுமில்லை,நாம் இனிமேல் முன்னெடுக்கப்போகும் போராட்டம் முன்னேப்போதுமில்லாமல் வித்தியாசமாகவும் போர் என்றால் என்ன என்று ஸ்ரீலங்கா கடை நிலை மக்கள்கூட அறிந்திருக்கக்கூடியதகவும் இருக்கும்,எம் தேசத்தில் எஞ்சியிருக்கும் எம் தேசத்து பிஞ்சுகள் கேட்கின்றன எஞ்சியிருக்கும் மரம் செடி கொடிகள் கேட்கின்றன செந்நீரினால் குளித்திருக்கும் எம் தேசத்து மண் கேட்கின்றது இதற்கு தமிழனின் பதில் என்னவென்று ? நிச்சயமாக சொல்கிறோம் இவற்றுக்கு எல்லாம் பதில் உண்டு எம்தேசத்து மக்களின் உயிர்களுக்கு விலை உண்டு எம் தேசத்து மரம் செடிகொடிகளுக்கு கூட விலை உண்டு இனிவரும் காலங்களில் உண்டு.காத்திருங்கள்.வாழ்வை கேட்ட தமிழனுக்கு இந்த உலகு தந்தது சாவு மட்டுமே,நாம் இதுவரை மனிதம் இல்லாத உலகில் மனிதர்களாக வாழ்ந்தோம் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.எம் தேசம் எங்கும் சதை துண்டுகளும் ரத்தமும் பிணங்களுமே சிதறிக்கிடக்கின்றது நாம் பொறுமையின் எல்லையிலும் நியாயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,எம் அன்புக்குரிய புலத்தில் வாழும் மக்களே உங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுங்கள்,நிச்சயம் தமிழீழம் கிடைக்கும்.

அருளன்
தமிழீழம்........

Title
body